கந்தளாயில் துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு
கந்தளாய், வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கந்தளாய் அவசர பொலிஸ் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்றையதினம்(23.4.2026)இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் தேடுதலின் போது, மொத்தம் 51 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்கள், T-56 ரக தோட்டாக்கள், 47 GTNG தோட்டாக்கள், 02 S.L.R. தோட்டா- 01 9 MM தோட்டா- 01 மெகசின்-01 என்பனவாகும்.

குறித்த தோட்டாக்கள் யாரால், எதற்காக அங்கு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam