கிராம உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்
இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் சேவை அரசியயல் யாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01.07.2024) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவுடன் (Sagala Ratnayaka) இந்த கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுமித் கொடிகார மேலும் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணிப்புறக்கணிப்பின் போது, கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் வழங்கல் மற்றும் இறப்பு பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் சங்கத்தின் சேவை அரசியல் யாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, தற்போது குறித்த கோரிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri