இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டால் 5 ஆண்டுகள் சிறை: எச்சரிக்கும் அரசாங்கம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சேறு பூசும் போலி பிரசாரங்களை சிலர் முன்னெடுத்து வருவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை அதிகரித்தால் அது சாதாரண விடயமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம்
அவ்வாறான ஒரு நிலைமைக்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நபர்கள் இந்த சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போலி தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை
அவ்வாறு போலி தகவல்களை பகிர்வோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் இதுவரையில் 20 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam