சீன நிறுவனத்தினால் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளது.
சீனாவின் ஒரு மருந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் சீனாவும், இலங்கையும் தங்கள் இருதரப்பு "தடுப்பூசி இராஜதந்திரத்தை" விரிவுப்படுத்தவுள்ளன.
புதிய தொழிற்சாலை ஒரு உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்படும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹேன தெரிவித்தார்.
இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீனாவின் சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி அம்பாந்தோட்டையில் உள்ள பிரத்தியேக மருந்து உற்பத்தி மண்டலத்தில் அமைக்கப்படும் என்று இலங்கை தூதர் கூறியுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
