வவுனியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தோணிக்கல் கிராம அலுவலகர் காரியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் இன்று (10) காலை தொடக்கம் மதியம் வரை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தி மூன்று மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், இரண்டாவது மற்றும் முதலாவது தடுப்பூசி பெறாதவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியும் ஏற்றப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட்டதுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.








புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam