தபால் மூல வாக்களிப்பில் அரசாங்கத்திற்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும்
தபால் மூல வாக்களிப்பில் அரசாங்கத்திற்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என ஶ்ரீலங்காக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுஜன முன்னணி கட்சி நுவரெலியா மாவட்டத்தில் நடத்திய பிரசாரக் கூட்டங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து அரச ஊழியர்கள் கள்வர்கள், சோம்பேறிகள் என குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே பல அரச பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரசாரக் கூட்டங்கள் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சீ.பி. ரட்நாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
