அரசாங்கம் நாட்டின் வங்குரோத்து நிலையை மூடி மறைக்க முயற்சிக்கின்றது!
அரசாங்கம் நாட்டின் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene ) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கட்சி செயற்பாடுகள் குறித்து zoom செயலி ஊடாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலை காரணமாக நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு எதிர்வரும் 2022ம் ஆண்டில் தட்டுப்பாடு நிலவும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் 1.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், பிட்ச் தரப்படுத்தலில் இலங்கை பின்னிலை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் கடன் செலுத்துகைகளை மேற்கொண்டால் எரிபொருள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கடன் செலுத்த முடியாத நாடு ஒன்றுக்கு எந்தவொரு தரப்பும் கடன் வழங்காது, கோவிட் நிலைமைகளை குற்றம் சுமத்துவதில் பயனில்லை எனவும், அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.