கோவிட் - 19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தற்போது அமுலில் இருக்கும் கோவிட் - 19 முடக்கமே கடைசியாக இருக்கும் என்ற நம்பிக்கையை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்வைத்துள்ளார்.
டவுனிங்க வீதியில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கோவிட் - 19 தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அனைவரின் முயற்சிகளையும்” பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை அடுத்த ஐந்து முன்னுரிமை குழுக்களுக்கு செல்லும்போது "ஓய்வெடுக்க எந்த தருணமும் இருக்காது" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் - 19 முடக்கம் எவ்வாறு எளிதாக்கப்படும் என்ற தமது திட்டம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.
அடுத்த வாரம் சில வியங்கள் மிகவும் நிச்சயமற்றதாக இருந்தாலும், இயல்புநிலைக்கு செல்லும் வழியைப் பற்றி எங்களால் முடிந்தவரை ஒரு திட்டத்தை அமைப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முடக்கடே கடைசியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவம் அவரல் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தயவுசெய்து பொது மக்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருவேண்டும் எனவும், என்ஹெச்எஸ் மற்றும் உயிர்களை காப்பாற்றுங்கள்." எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்றுக்கு மேலும் 230 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அரசாங்க புள்ளிவிவரங்களில் மேலும் 9,765 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 15.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் - 19 வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.