ரிஷாத்தின் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு - த.தே.கூட்டமைப்பின் பகிரங்க கோரிக்கை
ரிஷாத்தின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க அவர் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் மலையக சிறுமியொருவர் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் எரியுண்டு மரணித்திருக்கிறார்.
பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியிலே ரிஷாத் பதியுதீன் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
