வடக்கு மக்களுக்கு ஆளுநர் வழங்கும் செய்தி
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் நாளில் அனைவரிடமும் அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, பிறருக்கு உதவி செய்தல் ஆகிய நற்பண்புகளை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற மக்களுக்கும் சில காரணங்களால் கொண்டாட முடியாதவர்களுக்கும் எனது தைப்பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் தனது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்து உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமக்குரிய தனித்துவமான நன்றியின் பெருவிழாவான பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடும் வேளை பொங்குக நன்றியால் பொங்குக - இறை அளித்த தரையை எண்ணி - தரை அளித்த விளைவை எண்ணி - பொங்குக நன்றியால் பொங்குக என்ற கிறிஸ்தவப்பாடல் மூலம் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri
