அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானம் : வெளியான அறிவிப்பு
சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி பொது அழைப்பை விடுத்துள்ள நிலையில் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியினர் கட்சியில் இணைந்து கொள்ளாவிட்டால் வழமை போன்று அரசாங்கத்தை தொடர்வதற்கு ஜனாதிபதியும் ஆளும் தரப்பும் இன்று தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைத்து கட்சிகளையும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை கட்சிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வழமை போன்று அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எந்த தரப்பினராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் வழமை போன்று ஆட்சியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri