இலங்கை தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசனை!
இலங்கையுடனான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உதவும் புதிய திட்டம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்தின் வளரும் நாடுகளின் வர்த்தக திட்டம், இலங்கை உட்பட 70 நாடுகளுடன் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை வளர்ப்பதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதன் கீழ் முன்மொழியப்பட்ட திட்டம், அதிக வாய்ப்பை தருகிறது. இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான குறைந்த கட்டணங்கள் மற்றும் மூல தேவைகளின் எளிமையான விதிகள் போன்ற மேம்பாடுகள் இதில் அடங்குக்கின்றன.
நாடுகள் தங்கள் ஏற்றுமதியை பன்முகப்படுத்தவும் பொருளாதாரங்களை வளர்க்கவும் இந்த திட்டம் அனுமதிக்கிறது.
முன்மொழியப்பட்ட திட்டம் உலகளாவிய சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான பிரிட்டனின் ஆர்வத்தை காட்டுகிறது.
அதே போல் இலங்கை வணிகங்களை இங்கிலாந்து சந்தையை எளிதில் கொண்டு சேர்ப்பதன் மூலம் இலங்கைக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2020 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுனாக இருந்தது, இந்தநிலையில் மேலும் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஆலோசனைக்கு பங்களிக்க இலங்கையில் உள்ளவர்களை தாம் அழைப்பதாக இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் புதிய திட்டத்தின் ஆலோசனை எட்டு வாரங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
2021 செப்டம்பர் 12 ஆம் திகதி வரை ஆலோசனைக்கான பதில்களை GOV.UK வழியாக வழங்க முடியும் என்று உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... வீடியோ பாருங்க Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri