மூன்றாவது அலையினை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஆர்வமில்லை!கோவிந்தன் கருணாகரன்
முதலாவது,இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரம் மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கான கோவிட் சிகிச்சை நிலையம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குணம்,குறிகளுடன் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தௌபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், கோவிட் தொற்று இந்த நாட்டில் ஏற்பட்டவுடன் சுகாதார பிரிவினர் அர்ப்பணிப்புடன் மக்கள் நலன்சார்ந்து இரவு பகலாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.இது வரவேற்கத்தக்கது.
கோவிட் தொற்றினால் இன்று பல வைத்தியசாலைகள் அபிவிருத்தி அடைகின்றன.ஒரு கெட்டது நடக்கும் போது சில நல்லவைகளும் நடப்பதுண்டு.
இந்த பிரதேசத்தினை சுனாமி தாக்கியபோது அதனை சிலர் தங்கச்சுனாமி என்று கூறினார்கள்.
மக்களை,பிரதேசத்தினை சுனாமி அழித்தாலும் அதிலிருந்து ஏனைய பகுதிகள் அபிவிருத்தி அடைந்த காரணத்தினால் அதனை தங்கச்சுனாமி என்று கூறுகின்றார்கள். ஒன்றைப்பெறும் போது ஒன்றை இழந்தேயாக வேண்டும்.
கோவிட் தொற்றினால் எமது பிரதேச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யுமளவிற்கு வந்துள்ளது.உண்மையில் முதலாவது அலை,இரண்டாவது அலை இந்த நாட்டில் வரும் போது ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் இருந்த இந்த தொற்று தற்போது மூன்றாவது அலையானது சமூகத்திற்குள் பரவியதாக காணப்படுகின்றது.
முதலாவது,இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தினை மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை. அதற்கு மேலாக சுகாதார அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்யமுடியாத வகையில் அவர்களின் கைகள் கூட இராணுவத்தினரால் கட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.
மத்திய அரசாங்கத்தில் கூட துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் கோவிட் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
கோவிட் செயலணிக்கு இராணுவத்தளபதியை நியமித்தது மாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டத்தினையும் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சில தடைகளும் ஏற்பட்டுள்ளன. மேற்குலக நாடுகளில் மிக மோசமாக பரவிய கோவிட் இன்று பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க,பிரித்தானியா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கில் மரணங்கள் இடம்பெற்றன.இன்று ஒரு மரணம் கூட இடம்பெறாத அளவுக்கு பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.தடுப்பூசிகள் போடப்பட்டதே காரணமாகயிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
