தன்னிச்சையாக பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ள அரசாங்கம்

Srilanka Arrest Sajith
By Ajith Aug 22, 2021 02:56 PM GMT
Report

எரிபொருள் பற்றாக்குறையை முன்னறிவித்த, தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அரசாங்கம் தன்னிச்சையாகவே பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக தொழிற்சங்கத் தலைவர்களை தன்டனைக்குட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி அன்று எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில், எதிர்க்கட்சி முதல் முதலாக வெளிப்படுத்தியது, அதனைத் தொடர்ந்து, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டர் செய்தியை வெளியிட்டு எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

எரிபொருள் தொடர்பாக இத்தகைய சூழ்நிலையை நிலவும் போது இத்தகைய கணிப்பைச் செய்த ஆனந்த பாலித கைது செய்யப்பட்டதன் நோக்கம் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.

இந்தநிலையில் ஆனந்த பாலிதவை பொய்யான அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ள அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வெளியிட்ட பொய்யான அறிக்கைகளை நாம் திரும்பிப் பார்த்தால், அரசாங்கத்தின் 90% க்கும் அதிகமான உறுப்பினர்கள், கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டிற்குள் நுழையலாம் என்று கடந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி அன்று எதிர்க்கட்சி வலியுறுத்தியது. எனினும் இலங்கைக்கு அத்தகைய ஆபத்து இல்லை என்றே அரசாங்கம் கூறியது.

அதே ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி, கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக "முகக்கவசங்களை" மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று தாம் அரசாங்கத்திடம் கூறியபோது, ​​அப்போதைய பொறுப்பான அமைச்சர், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசங்கள் அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் போது, ​​பொறுப்புள்ள அமைச்சர்கள் முட்டிகளை ஆறுகளில் வீசியதுடன் அனுமதியற்ற பானிகளை கொண்டு நாடாளுமன்றத்தில் கூட பிரசாரம் செய்தனர்.

கொவிட் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, கடந்த மே 17 ஆம் திகதி அன்று இலங்கையில் சுகாதாரப் சேவைகள் துறைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலை அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பியிருந்ததுடன், அரசாங்கத்திடம் நிதியில்லை எனத் தெரிவித்து பொதுமக்களிடம் ஆதரவு கோரி இருந்தார்.

எனினும் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அன்று, ஒரு முக்கிய அரசாங்க அமைச்சர் அரசாங்கத்திடம் போதுமான பணம் இருப்பதாக கூறினார்.

கடந்த மே 23 ஆம் திகதி அன்று, மற்றொரு அமைச்சர் அரசாங்கத்திடம் போதுமானளவு பணம் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் இந்த முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்ட அமைச்சர்கள் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுத்தது என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

2021, மே 4 ஆம் திகதி, டோசிலிசுமாப்(Tocilizumab) மருந்து இல்லாமை பற்றி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திற்கு நினைவூட்டியதுடன் , கடந்த செவ்வாய்க்கிழமை (17) நாடாமன்றத்தில் இது குறித்து மீண்டும் இதயசுத்தியுடன் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தியபோது, ​​அரசாங்க அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட மருந்துக்கு பற்றாக்குறை இல்லை என்று கூறினார்.

உண்மை நிலை என்னவென்றால், அந்த மருந்து உண்மையில் இந்த நாட்டில் இல்லை என்பதாகும். எனவே, முழுமையான பொய்மையை மற்றும் நம்பகத்தன்மையின்மையிலான கருத்தியல்களை வெளிப்படுத்திய அடிப்படையில் அரசாங்கத்தில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக, நாட்டுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அவதானங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துபவர்கள் அல்ல என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US