அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் திண்டாட்டம்! உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்
கடந்த ஆண்டு பொருளாதாரம் சரிந்ததால், அரசின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமுர்த்தி கொடுப்பனவு தாமதமாகும்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த மாதம் நிதிப் பற்றாக்குறையால் இந்த மாத சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம். நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படும், பெறுநர்கள் தாமதத்தை எதிர்பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு பொருளாதாரம் சரிந்ததால், அரசின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.
தொடர்ந்து பணத்தை அச்சிட முடியவில்லை, இதனால் பணவீக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக நாடு பணத்தை அச்சிடுவதற்கும் தடைகளை எதிர்நோக்கி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam