அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயம் : நிதி அமைச்சு உறுதி
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் அடைந்துள்ள முன்னேற்றத்தை பொதுமக்கள் அங்கீகரிக்க வேண்டும்.
கடந்த வருடம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதியை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
அரச ஊழியர்களின் கடமை
திறைசேரி காலியாக இருந்ததால், மாதாந்த சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் போராடியது.
எவ்வாறாயினும், சரியான தலைமைத்துவம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக, நிலைமை வெகுவாக மேம்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் வாயை முடக்கும்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்திலும் எதிர்க்கட்சிகள் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
நாடு முன்னேற கூட்டு முயற்சி தேவை என்பதால், அரசு ஊழியர்களும் தங்கள் கடமைகளை திறமையாகச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.