விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு

Disabilities Jaffna University of Jaffna Ramalingam Chandrasekar
By Theepan Aug 23, 2026 04:49 AM GMT
Report

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசின் நோக்கம்

 கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்பது எம்மை பொறுத்தவரையில் எட்டாக்கனியாகவே இருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் எமது மக்களுக்கு அரிதாகவே இருந்தன.

இந்த நிலைமையை ஆழமாக ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தை கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாக வைத்திருக்காமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை சென்றடையும் வகையில் மாற்றியமைத்துள்ளது.

விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு | Government Aims Equal Opportunity For Disablities

அதன் வெளிப்பாடாகவே இன்று எமது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாகவும், எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு முக்கியமான வெளிப்பாடாகவே இன்று இங்கு கூடியிருக்கும் எமது மாணவச் செல்வங்களான மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த நிகழ்வையும் நாம் பார்க்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். உலகை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும் அவர்களிடம் உள்ளது.

சமூகத்தில் சம உரிமை

இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிடலாம். உடல் ரீதியான பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அறிவாற்றலால் உலக விஞ்ஞானத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி, அழியாத தடம் பதித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் சம வாய்ப்புகளையும் தேவையான வளங்களையும் வழங்கி, அவர்களும் சமூகத்தில் சம உரிமையுடன் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம்.

விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு | Government Aims Equal Opportunity For Disablities

‘மாற்றுத்திறனாளி’ என்ற அடையாளம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் சம வாய்ப்புகளும் கிடைக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எதிர்காலத்திலும் இதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும், கடந்த காலங்களை விட இன்று மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவமும் குரலும் வலுப்பெற்று வருகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆற்றலுடன் இந்த நிகழ்வில் உரையாற்றி, பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து வருவதை குறிப்பிடலாம்.

வெற்றிப் பயணம்

இதுபோன்ற மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம், சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள் என்றால், இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் காரணமாக உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியவர்களும் அதிகளவில் உள்ளனர்.

விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு | Government Aims Equal Opportunity For Disablities

அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், யாரும் மனம் தளராமல் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். உங்களின் வெற்றிப் பயணத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது. ஏழை, பணக்காரர்,சாதி,மதம் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் சமமான மனிதர்கள் எனவும், மாற்றுத்திறன் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.  

ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க

ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க

கொழும்பில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி

கொழும்பில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US