வரிகளை விதித்து வருமானத்தை கூட்டுவது பெரிய விடயமா!
வரிகளை விதித்து அரச வருமானத்தை அதிகரிப்பது ஓர் பாரிய விடயம் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தி ரத்த காட்டேரி போன்ற ரத்தத்தை உறிஞ்சுவதன் ஊடாக வருமானத்தை அதிகரிப்பது பெரிய காரியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மின்சார கட்டணங்களை அதிகரித்தும் நீர் கட்டணங்களை அதிகரித்தும் வரிக்கு மேல் வரிகளை விதித்தும், வருமானம் திரட்டுவதற்கு பெரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை தேவை இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
4990 பில்லியன் ரூபாய் அரச வருமானத்தை 5100 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுவதாகவும் இது முழுக்க முழுக்க மக்கள் மீது வரிச் சுமையை திணிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி வருமானத்தை அதிகரிப்பது பொருத்தமுடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசாங்க செலவுகளை குறைத்து வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை வீட்டில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்யும் அம்மாவும் செய்வார் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri