சம்பந்தனுக்கு அழைப்பேற்படுத்திய கோட்டாபய தரப்பு!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் இறுதியில் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி தரப்பால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறிதொரு தினத்தில் சந்திப்பை நடத்துவதற்கே எண்ணம் கொண்டிருப்பதாகவும் அதற்கான திகதியை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருக்கின்றார்.
அத்துடன், முதலாவது சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இடம்பெறவில்லை என்றும் அதனையிட்டு எதிர்மறையாக கருதவேண்டாம் என்றும் குறித்த இணைப்பாளர் சம்பந்தனை கேட்டுக்கொண்டதாக தெரியவருகின்றது.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்தானமை தொடர்பில் எவ்விதமான எதிர்மறையான வெளிப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 13 மணி நேரம் முன்

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
