அனைத்து மக்கள் விரோத செயற்பாடுகளுக்கும் கோட்டாபய தான் காரணம்: நாமல் - செய்திகளின் தொகுப்பு
மொட்டுக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற அனைத்து விதமான மக்கள் விரோத செயற்பாடுகளுக்கும் கோட்டாபய தான் காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் நேற்று (03) அநுராதபுரம் அடமஸ்தானய பிரதம தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.
அதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் மொட்டுக் கட்சிக்கு ஹேமரத்ன தேரரின் ஆதரவை பெற்றுக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
அத்தோடு, அதுபோன்ற
தீர்மானங்கள் காரணமாக வடமத்திய மாகாண விவசாயிகள் மிக மோசமான நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |