கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல்

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Singapore Thailand
By Murali Aug 10, 2022 11:35 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வார் என ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல் | Gotabaya Rajapaksa Is Going To Thailand Tomorrow

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு கோரிக்கை

அவருக்கு 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் விசா காலம் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் அவரது விசா காலம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat, கோட்டாபய ராஜபக்ச 90 நாட்களுக்கு நாட்டிற்கு தங்கியிருக்க அனுமதிக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கிறார் எனவும், எனினும், அவர் எப்போது தாய்லாந்து வருவார் என்று தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல் | Gotabaya Rajapaksa Is Going To Thailand Tomorrow

அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் இல்லை

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் இல்லை என்றும் அதன் பின்னர் வேறு நாட்டுக்கு செல்வார் என்றும் இலங்கை தரப்பு தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்தால், அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால், அவர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட மாட்டார் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US