நாடு திரும்பும் கோட்டாபய! முன்னேற்பாடுகளுக்கு தயாராகும் அரசாங்கம் -செய்திகளின் தொகுப்பு
அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் இந்த வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் 2 உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதுடன்,அவற்றில் ஒன்று விஜேராம மாவத்தையிலும் மற்றையது புல்லர்ஸ் வீதியிலும் அமைந்துள்ளது.
இதன்படி ராஜபக்ச குடும்பத்திற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டு ஒதுக்கீட்டில் இருந்து 4 வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan