கோட்டாபயவின் அரசியல் மீள் பிரவேசம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரைச் சந்திக்கப் போகும் அரசியல்வாதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூட ஆர்வம் காட்டவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அவருடனான உரையாடல்களில் அரசியல் இல்லாமல் பொதுவான தகவல்கள் மட்டுமே இடம்பெறுவதாகவும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து சில வருத்தங்கள் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மாதங்களின் பின் பேஸ்புக் பயன்பாடு
இதேவேளை, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தியுள்ளார்.

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வலைப்பந்து மகளர் அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மாலைத்தீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் தங்கியிருந்த இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாடு திரும்பியிருந்தார். தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் அவரை முக்கிய அரசியல் பிரமுகர்கள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri