ஜனாதிபதி பதவியில் இருந்து விலக கோட்டாபய இணக்கம்
நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார். அதற்கமைய, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்குகுழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார்.
டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.
சமகால பிரதமர் இரண்டு வார காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார், அதன் போது நிரந்தர நபர் ஒருவரை தற்காலிக ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri