கோபால் பாக்லே - மகிந்த இடையே விசேட கலந்துரையாடல்(Photos)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் இருந்து விலகும் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து விடைபெற்றறுள்ளார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உயர் ஸ்தானிகர் பாக்லேவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருடைய பதவிக்காலம் முழுவதும் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவையும் நட்பையும் அங்கீகரித்து மகிந்த ராஜபக்ச பாராட்டியுள்ளார்.
இராஜதந்திரியின் எதிர்கால முயற்சி
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், விடைபெறும் இராஜதந்திரியின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.பி.ரத்நாயக்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
