பொருட்கள் மற்றும் சேவை பயன்பாட்டை வரையறுக்குமாறு கோரும் ஆளும் கட்சி
பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டை வரையறுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆடும் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது பொருட்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் தற்போதைய அரசாட்சியில் உலக நடப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உலக அளவில் நிலவிவரும் நிலைமைகளை கருத்தில் கொண்டு எரிபொருள் விலைகளை சிறிதளவு உயர்த்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய தவறினால் எதிர்காலத்தில் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் பல தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தற்போதைய நிலைமைகளை புரிந்து கொண்டு இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டை வரையறுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாம் பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam