தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! கொழும்பு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்(Video)
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 159,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இதேவேளை இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்று ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 24 கரட் தங்கப்பவுணொன்று ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய 27 நாட்களுக்குள் 24 கரட் தங்கத்தின் விலை சுமார் 9 ஆயிரத்து 500 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை
இதேவேளை இந்த மாதத்தின் முதல் பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 7ஆயிரத்து 150 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலை குறைவடைய காரணம் எனவும், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சடுதியாக மேலும் குறைவடைய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
