உலக சந்தையில் தொடர்ந்தும் உச்சத்தில் தங்க விலை - இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்
உலக சந்தையில் இன்றைய தினம் (26.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5158 டொலராக காணப்படுகிறது.
தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது.
ஆறு மாதங்களில் பதிவான அதிகரிப்பு
அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை 52.44 சதவீதத்தால் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 88 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 370000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 400000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri