சிறுவயதில் ஒரு சாதனை: நாடளாவிய ரீதியான நடைபயணம்
கிளிநொச்சியில் நாட்டை சுற்றிய சாதனை நடைபயணத்தை ஆரம்பித்த சிறுவன் நேற்று மருதங்கேணியை வந்தடைந்துள்ளார்.
சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் நேற்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.
சிறுவயதில் ஒரு சாதனை
சிறுவயதில் ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.
சிறுவனுடன் அவரது தந்தையாரும் இணைந்திருந்தார். இந்நிலையில் நாளை மறுதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் அவரது பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |