இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் வழங்கிய மகிழ்ச்சி தகவல்: செய்திகளின் தொகுப்பு
இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி பண்டார, ஜப்பானியத் தூதுவரை தலதா மாளிகையில் வரவேற்றார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,