காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு பெற்றோர் வேண்டுகோள்
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமி காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி இந்த மாதம் 3ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சிறுமியின் தந்தை கடந்த 1ஆம் திகதி கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து சென்று நிறுத்தியுள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி காலை 11 மணியலவில் தனது தாயிடம் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த சிறுமி அன்று பிற்பகல் முதல் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை கல்வி கற்றிராத இந்த சிறுமி கடந்த ஐந்து நாட்களாக காணாமற் போயுள்ளதாக சிறுமியின் தாய், தந்தையர் கந்தப்பளை மற்றும் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ள நிலையில் சிறுமியை கண்டால் அவர் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் 075 620 3901 என்ற தொலைபேசிக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர் அறிவித்துள்ளனர்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam