வாய்க்காலுக்குள் தவறி விழுந்து 04 வயது சிறுமி உயிரிழப்பு
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் - முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
“தந்தை வீட்டின் முன்பாக வாகன பற்றரி மாற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி
அருகில் இருந்துள்ளார்.
இந்த தருணத்தில் வாய்க்கால் அருகே சிறுமி சென்றபோது, அவர் அணிந்திருந்த செருப்பொன்று தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
அதை எடுக்க முயன்றபோது, சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாய்க்காலுக்குள் தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வெள்ளத்தில் 500 மீற்றர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
சற்று நேரத்தின் பின்னர், பிள்ளையை குடும்பத்தினர் தேட ஆரம்பித்துள்ளனர். இதன்போது அந்த வீதியின் ஊடாக புல் வெட்ட சென்ற நபரொருவர் சிறுமியின் சடலத்தை அவதானித்து தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
