இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற 74 வயதான ஹங்க் பிரெட் ஹைன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறுகியகால விடுமுறை
உயிரிழந்தவர் தனது மனைவியுடன் குறுகியகால விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரையில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் இலங்கையர்களும் ஒன்று சேர்ந்து நீரில் மூழ்கியவரை மீட்டு பேருவளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளார். பேருவளை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை சடலத்தை களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri