ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்: பொதுப்போக்குவரத்தில் மாற்றம்
ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புள்ளியியல் விபரம்
ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதியில் கணிசமாக உயர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சுமார் 5.3 பில்லியன் பொதுமக்கள் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகம் என்பதுடன், 2019ஐ ஒப்பிட்டால் இது 13 சதவிகிதம் குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதற்குக் காரணம் ஜேர்மனி அறிமுகம் செய்த 49 யூரோக்கள் பயணச்சீட்டு என புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
