ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video)

Sri Lankan Tamils Sri Lanka Sri Lanka Government Canada
By DiasA Nov 01, 2022 06:18 PM GMT
Report

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் போர்க்குற்றம் செய்ததற்காக இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் கனடாவின் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பழமைவாதக்கட்சியின் தலைவருமான Pierre Poilievre ஞாயிற்றுக்கிழமை (30/10/2022) கனடாவின் ரொறன்ரோ பெருநகர்ப் பகுதியின் முக்கிய நகரான மிசிசாகா நகருக்கு சென்றுள்ளார்.

ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Genocide In Srilanka Canada Opposition Party

மக்களுடன் கலந்துரையாடல்


இதன்போது ரொறன்ரோ பெருநகர்ப் பகுதியில் வாழும் கொன்சவேடிவ் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களை பிரத்தியேகமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கொன்சவேடிவ் கட்சி ஆட்சியில் Pierre Poilievre முன்வைக்கவிருக்கும் பல்வேறு நிலைப்பாடுகளை தெளிவாக்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.

இதன்போது தமிழ் கனடியர்கள் ஒரு சமூகமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமிழ் செயல்பாட்டாளர்களுடன் ஆராயப்பட்டுள்ளது.

ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Genocide In Srilanka Canada Opposition Party

ஒருகட்டத்தில், தற்போதைய லிபரல் அரசாங்கம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மற்றும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை என்பன தொடர்பில் காட்டிவரும் மேம்போக்கான நிலைப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவற்றைச் செவிமடுத்த Pierre Poilievre எதிர்வரும் காலங்களில் அது குறித்து கொன்சவேடிவ் கட்சி செய்யவிருக்கும் எதிர்வினைகளை விளக்கியுள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை

ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Genocide In Srilanka Canada Opposition Party

அதன்பின்னர் கொன்சவேடிவ் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டூழியர்களின் முன்னிலையில் Pierre Poilievre உரையாற்றியுள்ளார். உரையின்போது கனடாவின்பொருளாதாரத்தை சீர்செய்ய எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளில் சிலவற்றை பியர் விபரித்துள்ளார்.

மேலும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை அழுத்தமாகத் தெரிவித்த அவர், போர்க்குற்றம் செய்ததற்காக இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Genocide In Srilanka Canada Opposition Party

மேலும், தனது ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் Stephen Harper, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் John Baird ஆகியோர் இலங்கை சார்ந்த விடயங்களில் முன்னெடுத்த செயல்பாடுகளையொத்த அரசியல் நடவடிக்கைகளையே தானும் முன்னெடுக்கப்போவதை உறுதி செய்துள்ளார்.

நன்றி தெரிவிப்பு

இச்சந்திப்பின்போது அல்பேட்டா மாகாணத்தின் Calgary Forest Lawn தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் நடுத்தர வர்க்க செழிப்புக்கான நிழல் அமைச்சருமான Jasraj Hallan, ஒன்ராறியோவின் Flamborough Glanbrook தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dan Muys, ஒன்ராறியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கொன்சவேடிவ் கட்சியின் துணைத் தலைவருமான Melissa Lantsman ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஈழத்தமிழருக்கு நடந்தது இனப்படுகொலையே! கனடாவின் பிரதான எதிர்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Genocide In Srilanka Canada Opposition Party

மேலும் கொன்சவேடிவ் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் அயராது உழைத்ததன் மூலம் 68.15% வாக்குகளை தனக்குப் பெற்றுக் கொடுத்து வெல்ல வைத்த தமிழ் தொண்டூழியர்களில் சிலரை Pierre Poilievre நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US