ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாரதூரமான பிரேரணை! இலங்கை தப்பிக்க ஒரேயொரு வழி
இம்முறை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது குறிப்பிடத்தக்களவில் பாரதூரமானதாகவே காணப்படுகிறது.
எனவே தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டியது அவசியமாகவுள்ளது என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நெருக்குதல்களிலிருந்து இலங்கை தப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,