மின்பிறப்பாக்கி பழுது: இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை (Photos)
மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுது பட்டமையால் வைத்தியசாலை முழுவதும் இருளில் மூழ்கியது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயங்க மறுத்ததன் காரணமாக தொலைபேசி வெளிச்சத்தின் மூலம் சேவைகள் இடம்பெற்றுள்ளன.
வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும்
நிலையில், இவ்வாறு வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி உரிய முறையில்
பராமரிக்கப்படாததன் விளைவே இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுவதாகத் தகவலறிந்த
வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri