பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டியம் நாடு முழுவதும் செயற்ப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கவனயீர்ப்பு போராட்டம்
அதனடிப்படையில் நேற்று வலி. மேற்கு பிரதேச சபையிக்கு முன்னால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் "ஒன்றுபடுவோம் பெண்கள் உரிமையை வென்றெடுப்போம்”, “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் வாகனங்கள் மற்றும் சுவர்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்
“நாட்டில் தற்போது போதைவஸ்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு காணப்படுகிறது.

இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவேண்டும் என்றால் போதைவஸ்து ஒழிக்கப்பட வேண்டும்.
போதையை ஒழித்தால் பெண்கள் மற்றும் சிறுமவர்களுக்கு எதிரான வன்முறைகள் தானாகவே இல்லாமல் போய்விடும். பெண்களே உங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நீங்களே எழுந்து வந்து போராட வேண்டும்” என்றனர்.
இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபையின்
செயலாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri