இலங்கையிலிருந்து வெளிநாடுக்கு அனுப்பிய பொதிகளில் மாயமான இரத்தினகற்கள் - செய்திகளின் தொகுப்பு
கடந்த மூன்று மாதங்களில் இலங்கை வான்வழி தபால் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இரத்தினகற்கள் சுமார் பத்து தடவைகள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் பொலிஸ், தபால் திணைக்களம் மற்றும் விமான நிலையம் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் விமான நிலையத்தினூடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இரத்தினக்கற்கள் பொதிகள் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும், அந்த பொதிகளில் இருந்த கற்கள் காணமல் போனமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



