இரத்தினக்கல் வியாபார பணமோசடியில் சிக்கிய வர்த்தகர்: பொலிஸார் நடவடிக்கை

Kalutara Sri Lanka Police Investigation
By Dharu Jul 04, 2023 10:27 PM GMT
Report

பேருவளை பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 நீல மாணிக்கற்களை பெற்று விலை மதிப்பற்ற காசோலைகளை வழங்கியதாக கூறப்படும் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் இருவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை அடுத்து ஜா-அல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 நீல இரத்தினகற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

இரத்தினக்கல் வியாபார பணமோசடியில் சிக்கிய வர்த்தகர்: பொலிஸார் நடவடிக்கை | Gem Price Sri Lanka Illegal Business

அதேபோன்று, பேருவளை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இரத்தினக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்தும் பணத்தை வழங்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், விசாரணைகளின் பின் களுத்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US