சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான போலித் தகவல்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் சமூக ஊடகங்களில் போலித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024(2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது.
இந்த போலித் தகவல்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கல்வி அமைச்சிற்கு அறிவித்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த விளக்கம் வெளியிடப்படுவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
