உலகை உலுக்கிய காசா சம்பவம்: ரிஷி சுனக் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
காசா வைத்தியசாலை மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவமானது உண்மையில் காசா பகுதியில் இருந்தே முன்னெடுக்கப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி வைத்தியசாலையை இஸ்ரேல் தரப்பு தாக்கியதாக தொடக்கத்தில் ஹமாஸ் குற்றஞ்சாட்டியது.
ஆனால் தங்களுக்கு இதில் பங்கில்லை என இஸ்ரேல் கடுமையாக இதனை மறுத்தது.
தாக்குதல் விவகாரம் தொடர்பில் கருத்து
அதுமட்டுமின்றி, ஹமாஸ் ஆதரவு இயக்கம் ஒன்றே தாக்குதலை தொடுத்துள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.
இந்த தாக்குதலின் தொடக்கத்தில் மொத்தம் 500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உண்மையான எண்ணிக்கை மிக குறைவு என்றே உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக சுனக் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பானது காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் உருவானது என்றே சுனக் குறிப்பிட்டுள்ளார்.
சுனக் எச்சரிக்கை
ஹமாஸ் படைகளுக்கு, இனி காசா அல்லது பாலஸ்தீனத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிகாரம் செலுத்த முடியாது என்றார்.
மேலும், காசா பகுதி அப்பாவி மக்களுக்காக கூடுதலாக 20 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், காசாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் சுட்டக்காட்டினார்
மேலும், மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை உக்ரைனில் புடினின் கொடூரங்களுடன் ஒப்பிட்ட ரிஷி சுனக், உக்ரைனில் புடின் தோல்வியடைவது உறுதி என குறிப்பிட்டுள்ளதுடன், ஹமாஸ் படைகளுக்கும் அதே நிலை தான் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.