முகேஷ் அம்பானியை பின்தள்ளி பெரும் பணக்காரரானார் அதானி
'அதானி' குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ரிலையன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராகியிருக்கிறார்.
ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருந்து வந்தார். இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி இருந்தார்.
அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, கடந்த 2020ஆண்டு மார்சில் 36 ஆயிரத்து, 825 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இருபது மாதங்களில் அக்குழுமத்தின் சொத்து மதிப்பு, ஜெட் வேகத்தில், 1,800 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நடப்பு ஆண்டில் அதானியின் சொத்து 4.12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அம்பானியின் சொத்து 1.07 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 6. 82 லட்சம் கோடி ரூபாயாகவும், அதானியின் சொத்து மதிப்பு, 6.60 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு நேற்று சரிந்தது.
அதேநேரத்தில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, முகேஷ் அம்பானியை முந்தி, ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராகியுள்ளார் கவுதம் அதானி.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri