வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை (Photos)

Vavuniya Sri Lanka Economic Crisis Litro Gas Sri Lankan Peoples
By Thileepan May 22, 2022 01:24 PM GMT
Report

வவுனியா - குட்செட் வீதியில் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றினை முற்றுகையிட்ட மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை மதவாச்சி பூனாவ பகுதிக்குச் சென்று அங்குள்ள பிரதான முகவரிடம் பெற்று வந்த நிலையில், சில சமயங்களில் கருப்பு சந்தையிலும் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை (Photos) | Gas Vehicle Besieged By People In Vavuniya

இந்நிலையில் வவுனியாவில் குடும்ப அட்டை முறையில் எரிவாயு வழங்குவதற்குப் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுத்திருந்தனர்.

இதனூடாக அனைத்து மக்களுக்குக் கிரமமாக மாதமொரு முறை எரிவாயு கிடைப்பதற்கான முறைமையும் குடும்ப அட்டை இல்லாது வவுனியாவில் வசிப்பவர்களுக்கு வேறு திட்டத்தினூடாக எரிவாயுவை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானித்திருந்தனர்.

இதன் பிரகாரம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அறிவுறுத்தலுக்கு அமைய இன்று எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை (Photos) | Gas Vehicle Besieged By People In Vavuniya

இதன்படி வவுனியா நகரம், குட்செட் வீதி, குருமன்காடு, மன்னார் வீதி, வேப்பங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 8 எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வவுனியா குட்செட் வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு எரிவாயுவினை வழங்கி விட்டு அப் பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு வாகனத்திலிருந்து 30 எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டன.

குறித்த பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயுவைப் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.

வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை (Photos) | Gas Vehicle Besieged By People In Vavuniya

இதனையடுத்து தமக்கும் எரிவாயு வேண்டும் என தெரிவித்து எரிவாயு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்த மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

தமக்கும் எரிவாயுவை வழங்கிவிட்டு வாகனத்தைக் கொண்டு செல்லுமாறு அவர்கள் விடாப்பிடியாக நின்றதையடுத்து அப்பகுதியில் நின்ற 110 பேருக்கு எரிவாயு வழங்கப்பட்டதுடன், எஞ்சிய வர்த்தக நிலையங்களில் வழங்கப்பட இருந்த எரிவாயுவையும் குறித்த அப்பகுதியில் வைத்து மக்களை வரவழைத்து வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை (Photos) | Gas Vehicle Besieged By People In Vavuniya

அங்குள்ளவர்க்கு எரிவாயு வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் முரண்படுவதனை கைவிட்டு வரிசையில் நின்று எரிவாயுவைப் பெற்றிருந்தனர்.

எனினும் பிரதேச செயலகத்தினூடாக திட்டமிடப்பட்ட முறைமையினை இனிவரும் காலங்களில் பின்பற்றாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வழமை போன்று பூனாவ பகுதிக்கு சென்றே எரிவாயுவைப் பெறவேண்டும் எனவும் குறித்த இடத்தில் பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US