நாட்டில் பல பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு (Video)
நாட்டில் பல இடங்களில் எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் பதிவாகின்றன.
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கரவெவ பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
ஐ.எஸ்.எம்.நளீம் என்பவரின் வீட்டிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கும் போது,
தான் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் காலையில் தயாராகி விட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதே நேரம் வீட்டுக்குள் இருந்த அடுப்பு வெடித்து அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் முற்றாக சேதமடைந்ததுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா
வவுனியா செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம் (02) எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
வீட்டில் இருந்த இல்லத்தரசி கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்கு தயாராகிவிட்டு அதனை இயக்கிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
இதன்போது எரிவாயு அடுப்பு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் பின்னர் வெடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் இரட்டை பெரியகுளம் பகுதியிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : சதீஸ்
திருகோணமலை கந்தளாய்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் லைட் வீதி பகுதிலுள்ள வீடொன்றிலே இன்று(3) இச் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தின் போது உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை.
இது கந்தளாயில் இரண்டாது வெடிப்பு சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : எப்.முபாரக்
கோப்பாய் தெற்கு இருபாலை
கோப்பாய் தெற்கு இருபாலை பகுதியில் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கு - இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று அயலவரை அழைத்துள்ளார்.
இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற அயலவர்கள் எரிவாயு கொள்கலனை அகற்றி தீயை அனைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது சம்பவம் இதுவாகும்.
திருகோணமலை உப்புவெளி
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா வெல்கம் விகார பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து வேறு வேலை செய்து கொண்டிருந்த வேளை சமையலறையில் சத்தம் ஒன்று கேட்டதாகவும் பின்னர் அங்கு சென்று பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு தீப்பற்றி சமயலரை புகை மூன்றாக காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மெதுவாக சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெக்குலெட்டர் பகுதியை கலட்டி தீயினை அனைத்தாகவும் தெரிவித்தனர்.
குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தின் போது எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிரியர் - அப்துல்சலாம் யாசீம்









இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
