கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிந்ததில் இருவர் பலி
கொழும்பு (Colombo) - மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (13.08.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
சுவாசப் பிரச்சினைகள்
உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து, இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
என்ன வகையான விஷ வாயு என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வீட்டில் விஷ வாயு பரவியிருப்பதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam