லாஃப்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு
சந்தையில் லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு சிலிண்டர்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
LAUGFS எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒரு செயல்பாட்டுக் கட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தற்காலிக விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது நிறுவனத்தின் வழக்கமான இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த முனையத்தை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்க அதிகாரிகளுடன் நிறுவனம் தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது.
மேலும் கொழும்பு துறைமுகம் வழியாக நாட்டிற்கு எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது.
கப்பல்களை கொழும்பு துறைமுகத்திற்கு திசைதிருப்ப ஏற்பாடுகள்
இடைக்கால நடவடிக்கையாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் எரிவாயு கப்பல்களை நேரடியாக கொழும்பு துறைமுகத்திற்கு திசைதிருப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எரிவாயு கையிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தைக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்துள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam