கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி
புதிய இணைப்பு
கனடிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் மீண்டும் பதவியேற்பு வெளிவிவகார மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர்களாக பதவியேற்றனர் ஏப்ரல் 28ஆம் நாள் கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து புதிய பிரதமர் மார்க் கானி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.
ரூடோ தலைமையிலான அரசில் அமைச்சர்களாக இருந்த பலர் இவ் அமைச்சரவையில் இரூக்க மாட்டார்கள் என்ற செய்தி பரவிய நிலையில் முன்னர் அமைச்சர்களாக இருந்த இரண்டு தமிழர்களும் இன்றும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முன்னர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக பதவி வகித்த இந்திரா அனிதா ஆனந்த் தற்போது கனடாவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார்.
அதேவேளை கனடிய பூர்வீக குடிகள் விவகாரம் மற்றும் நீதி சட்டமா அதிபர் திணைக்கள அமைச்சராக இருந்த கரி ஆனந்தசங்கரி பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முதலாம் இணைப்பு
கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுபாதுகாப்பு அமைச்சரான கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.
I am deeply honoured and humbled to be sworn in as Minister of Public Safety.
— Gary Anandasangaree (@gary_srp) May 13, 2025
I look forward to building on the good work of David McGuinty, and I am committed to serving Canadians by keeping our communities safe, combatting hate, and strengthening our security agencies. pic.twitter.com/CTn4grUzyo
பொதுபாதுகாப்பு அமைச்சர்
கனேடியர்கள் விரும்பும் மற்றும் தகுதியான மாற்றத்தை வழங்குவதற்காக கனடாவின் புதிய அமைச்சகம் கட்டமைக்கப்பட்டுள்ளது," என்று கார்னி ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவை வரையறுக்கவும், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கனடியர்கள் இந்த புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரான இவர் 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.
முதல் நீதி அமைச்சர்
முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்
Congratulations, @gary_srp, on your appointment as Minister of Public Safety. pic.twitter.com/PANmwbhcti
— Liberal Party (@liberal_party) May 13, 2025
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.
கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளைதீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கரி ஆனந்தசங்கரி அந்தகாலங்களில் திகழ்ந்துள்ளார்.
மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
