கனடா தேர்தலில் அபார வெற்றி பெற்ற இலங்கை தமிழர் வழங்கியுள்ள உறுதி
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்தும் முன்னணி வகிக்கும் என்பதை உறுதி செய்வதாக கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் Scarborough - Rouge Park தொகுதியில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்ட நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
I will continue to work tirelessly to serve residents in #ScarbTO - Rouge Park and to ensure that Canada continues to be a global leader in the protection of #HumanRights at the local, national, and international levels. (2/2)
— Gary Anandasangaree (@gary_srp) October 23, 2021
மூன்றாவது முறையாக Scarborough - Rouge Park தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.
Scarborough - Rouge Park இல் வசிப்பவர்களுக்கு சேவை செய்து அயராது உழைப்பதை தொடர்வேன்.
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்பதை உறுதி செய்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.