கத்தி முனையில் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் - பருத்தித்துறையில் சம்பவம்
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் கத்திமுனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
சிவராத்திரி தினத்தையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோவிலுக்குச் சென்ற நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை 6:45 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் வசிக்கும், வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் வீட்டிலேயே இக் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
முகத்தை மறைத்து முகமூடி அணிந்து கத்தியோடு உள்நுழைந்த இருவரைக் கண்டதும், வீட்டில் இருந்த அதிபரின் மனைவி, மகள்கள் ஆகியோர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அதிபரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்து தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.